Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 6 டிசம்பர் (ஹி.ச.)
சி.எஸ்.ஐ. கன்னியாகுமரி திருமண்டலத்தின் பேராயர் செல்லையா ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து 7வது பேராயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 25ந் தேதி நடைபெற்றது.
இதில் நெய்பூர் சேகர ஆயர் கிறிஸ்டோபர் விஜயன், மார்த்தாண்டம் சேகரம் கார விளை ஆயர் பிரேம் செல்வசிங், நெய்யூர் சேகரம் செம்பொன்விளை ஆயர் ராஜா ஜெயசிங், முட்டம் இறையியல் கல்லூரி தாளாளர் இராயப்பன் ஐசக் ஆகிய நால்வர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நால்வரிலிருந்துபுதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் சி.எஸ்.ஐ. சினாடு பேரவை தேர்ந்தெடுத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை சினாடு பேரவை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து புதிய பேராயருக்கான பதவியேற்பு விழா நாளை டிசம்பர் 7 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கஸ்பா ஆலயத்தில் வைத்து நடைபெற உள்ளது.
அருட்பொழிவு ஆராதனையில் புதிய பேராயராக தேர்வு செய்யப்பட்ட ஆயர் கிறிஸ்டோபர் விஜயனுக்கு சி.எஸ்.ஐ. பிரதம பேராயர் ரூபன் மார்க் அருட்பொழிவு அபிஷேகம் செய்கிறார்.
இதில் சி.எஸ்.ஐ. பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா, பொருளாளர் விமல் சுகுமார், மற்றும் பேராயர்கள், திருமண்டல ஆயர்கள் மற்றும் திருச்சபை மக்கள் கலந்து பலர் கொள்ளவுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b