தனியார் மருத்துவ கிளினிக்கில் 3 லட்சம் பணம் திருடிய குற்றவாளி -குற்றவாளி கைது!
காரைக்கால், 6 டிசம்பர் (ஹி.ச.) காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே மருத்துவர் வனிதா என்பவர் தனியார் மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி இரவு தனியார் கிளினிக் கதவை உடைத்து மருத்துவ
குற்றவாளிகுற்றவாளி


காரைக்கால், 6 டிசம்பர் (ஹி.ச.)

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே மருத்துவர் வனிதா என்பவர் தனியார் மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி இரவு தனியார் கிளினிக் கதவை உடைத்து மருத்துவர் அறையில் இருந்த மூன்று லட்சம் பணத்தை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் திருடியதாக மருத்துவர் வனிதா காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்து நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் மருத்துவர் கிளினிக்கில் பொறுத்திருந்த சி.சிடிவி கேமராவை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில் நேற்று தனியார் மருத்துவர் கிளினிக்கில் பணம் திருட்டில் ஈடுபட்ட அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்கின்ற நபரை கைது செய்து அவரிடம் 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு செல்போனை பயணிகள் செய்து அவரை காரைக்கால் சிறையில் அடைத்தனர்.

மேலும் தனியார் மருத்துவர் கிளினிக்கில் திருட்டில் ஈடுபட்ட ஸ்டீபன் ராஜ் தமிழகத்தில் உள்ள பல்வேறு திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளி என்று தெரியவந்தது.

இந்த நிலையில் தனியார் மருத்துவர் கிளினிக்கில் முகமூடி அணிந்து கொண்டு பணத்தை திருடும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Hindusthan Samachar / Durai.J