அம்பேத்கர் நினைவு நாள் - மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.) அரசியலமைப்பை சீர்குலைக்க முயலும் சர்வாதிகார சக்திகளை, அண்ணல் தந்த அறிவாயுதம் கொண்டு வீழ்த்துவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பிறப
Udhay


சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.)

அரசியலமைப்பை சீர்குலைக்க முயலும் சர்வாதிகார சக்திகளை, அண்ணல் தந்த அறிவாயுதம் கொண்டு வீழ்த்துவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

பிறப்பினாலே பேதம் எனும் சமூக அநீதியை, அறிவின் வலிமையால் எதிர்த்து வீழ்த்திய அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவு நாள் இன்று

விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் எதிரே உள்ள அண்ணலின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஆதிக்கவாதிகளின் குகைக்குள்ளேயே சென்று போராடிய புரட்சியாளர்

தனது மறைவுக்குப் பின்னரும் சமநீதிக்கான உரிமைப் போர் தொடரும் வகையில், அரசியலமைப்புச் சட்டம் எனும் பாதுகாப்பை நமக்கு தந்தவர்.

அரசியலமைப்பை சீர்குலைக்க முயலும் சர்வாதிகார சக்திகளை, அண்ணல் தந்த அறிவாயுதம் கொண்டு வீழ்த்துவோம்.

சமத்துவ சமுதாயம் படைப்போம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ