பெண் காவலர் வீட்டின் சாவி மற்றும் கார் சாவிகளை திருடியதாக ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை
கோவை, 6 டிசம்பர் (ஹி.ச.) கோவை அன்னூர், கொண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுப்புரத்தினம். இவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மார்டன் கண்ட்ரோல் ரூமில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் இவரது வீடின் அருகில் வசிக்கு
Despite filing a complaint with evidence that the keys to the female police officer's house and car were stolen, the police have not taken any action.


Despite filing a complaint with evidence that the keys to the female police officer's house and car were stolen, the police have not taken any action.


கோவை, 6 டிசம்பர் (ஹி.ச.)

கோவை அன்னூர், கொண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுப்புரத்தினம். இவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மார்டன் கண்ட்ரோல் ரூமில் பணி புரிந்து வருகிறார்.

இவருக்கும் இவரது வீடின் அருகில் வசிக்கும் கோமதி என்பவருக்கும் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோமதி என்பவர் குழந்தையுடன் வந்து சுப்புரத்தினத்தின் வீட்டின் சாவி, மற்றும் கார் சாவிகளை எடுத்து சென்றதாக கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் கோமதி அவரது கணவர் உட்பட மூன்று பேர் மீது அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் எதிர் தரப்பிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு, வழக்கு பதியாமல் அலைகழித்ததாக தெரிகிறது.

சுப்புரத்தினம் இது தொடர்பாக மாவட்ட காவல் ஆணையாளரிடம் புகார் அளித்த நிலையில், காவல் அணையாளர் இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்திரவு பிறப்பித்து உள்ளார்.

ஆனால் காவல் துறையினர் வழக்கு பதியாமல் மீண்டும் அலைகழித்ததால், சுப்புரத்தினம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து நீதியை பெற்று உள்ளார்.

அதில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்திரவிட்டும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் சுப்புரத்தினத்தை அலைகழித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றார்.

மாநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலருக்கே இது தான் நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

Hindusthan Samachar / V.srini Vasan