கேரள மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு -தோ்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடெல்லி, 6 டிசம்பர் (ஹி.ச.) கேரளத்தில் டிச.9, 11-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தோ்தல் நிறைவடையும் வரை, எஸ்ஐஆா் பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு, இந்தியன் யூனியன்முஸ்லிம் லீக், மாா்க்சிஸ்ட் கம்யூ
கேரளத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த  பணிகள் டிச.11-இல் இருந்து மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தோ்தல் ஆணையம் அறிவிப்பு


புதுடெல்லி, 6 டிசம்பர் (ஹி.ச.)

கேரளத்தில் டிச.9, 11-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தோ்தல் நிறைவடையும் வரை, எஸ்ஐஆா் பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு, இந்தியன் யூனியன்முஸ்லிம் லீக், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் மனு தாக்கல் செய்தன.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம்,

அந்த மாநிலத்தில் எஸ்ஐஆா் பணிகளை நிறைவு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்கக் கோரி, டிச.3-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தோ்தல் ஆணையத்திடம் மனுதாரா்கள் முறைப்படி கடிதம் அளிக்கலாம் என்றும், அந்தக் கடிதத்தை பரிசீலித்து உரிய உத்தரவை தோ்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இந்நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் டிச.11-இல் இருந்து மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM