போந்தவாக்கம் ஏரியின் உபரி நீர் 4 வழிச்சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர், 6 டிசம்பர் (ஹி.ச.) கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, பென்னாலூர்பேட்டை கிராமத்தில் உள்ள போந்தவாக்கம் ஏரியும் நிரம்பியது. இந்த ஏரி நிரம்பி அதன் உபரி நீர் தற்போது ஊத்துக்கோட்டை ம
போந்தவாக்கம் ஏரியின் உபரி நீர்  4 வழிச்சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி


திருவள்ளூர், 6 டிசம்பர் (ஹி.ச.)

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, பென்னாலூர்பேட்டை கிராமத்தில் உள்ள போந்தவாக்கம் ஏரியும் நிரம்பியது.

இந்த ஏரி நிரம்பி அதன் உபரி நீர் தற்போது ஊத்துக்கோட்டை முதல் போந்தவாக்கம், பெரிஞ்சேரி வரை ரூ.20 கோடியில் அமைக்கப்பட்ட 4 வழிச்சாலையில் போந்தவாக்கம் ரவுண்டானாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும், ஏரியின் உபரி நீரால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போந்தவாக்கம் பகுதியில் தூர்வாரப்பட்ட ஏரிக்கால்வாய் சரிவர தூர்வாராததால் போந்தவாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் கால்வாயில் செல்லாமல் சாலையில் சென்று பின்னர் கால்வாயில் செல்கிறது என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b