Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 6 டிசம்பர் (ஹி.ச.)
கோவையில் ஆர்.எஸ்.புரம், வடவள்ளியில் ஈஷா சார்பில் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு இலவச யோகா வகுப்புகள் நடைபெறவுள்ளன.
ஈஷா அறக்கட்டளை மூலம் குறிப்பாக தமிழகத்தில் ‘ஈஷா யோகா நிகழ்ச்சி’ என்று நடத்தப்படும் முதல் நிலை யோக வகுப்புகளில் 'ஷாம்பவி மஹா முத்ரா' எனும் சக்தி வாய்ந்த பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. இந்த பயிற்சி மக்களின் உள்நிலை நல்வாழ்விற்காக, தொன்மையான யோக அறிவியலின் அடிப்படைகளில் இருந்து சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்த குறிப்பிட்ட ஈஷா யோகா பயிற்சி மூலம் பல்வேறு உடல் மற்றும் மன நலன்களைப் பெற்றுள்ளனர்.
கோவையில் வடவள்ளி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 2 இடங்களில் இலவச 7 நாள் யோக பயிற்சி டிசம்பர் 10 முதல் 16 வரை நடைபெற உள்ளது. இதில் 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இலவசமாகப் பங்கேற்க முடியும்.
ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியின் மூலம் இளைஞர்களுக்கு உற்பத்தி திறன் மற்றும் மனம் குவிப்பு திறன் அதிகரிப்பு, மன அழத்தம் மற்றும் கட்டாய பழங்கங்களில் இருந்து விடுதலை, உடல் மற்றும் மன நிலையில் நீடித்த உற்சாகம் போன்ற பல்வேறு பயன்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த வகுப்பில் இலவசமாகப் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் https://isha.co/youth-rspuram, https://isha.co/youth-vadavalli என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு ஆர்.எஸ்.புரம் - 83000 - 93666, வடவள்ளி - 89395 - 68812.
ஈஷா யோகா பயிற்சி செய்வதற்கு முன்பும், பின்பும் மக்களிடம் உடல் மற்றும் மனதளவில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்து சர்வதேச அளவில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
அதில் குறிப்பாக பெத் இஸ்ரேல் மெடிக்கல் சென்டர் மற்றும் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல், ஐஐடி டெல்லியைச் சேர்ந்த பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை, போர்ச்சுக்கலில் உள்ள ஐரோப்பிய தூக்கவியல் ஆராய்ச்சி மையம், அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியானா பல்கலைக்கழகத்தின் மனநலப் பிரிவு, அமெரிக்காவைச் சேர்ந்த பூலே மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு ஆய்வு அமைப்புகள், ஈஷா யோகப் பயிற்சி மூலம் மனிதர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் முதல் பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தாக்கங்கள் வரை பல்வேறு கோணங்களில் ஆய்வுகளை மேற்கொண்டன.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் பல முக்கியமான ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமாக, ஈஷா யோகப் பயிற்சி செய்பவர்களின் மருந்துத் தேவை குறைகிறது. மன அழுத்தம், பதற்றம் ஏற்படுவது இல்லை. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகள் குணமாகின்றன.
மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்திறன் அதிகரிப்பது போன்ற பல்வேறு பலன்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, எரிச்சல் உணர்வு முதலான பல்வேறு மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் 80%-க்கும் மேல் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, இருதய நோய் போன்ற நாட்பட்ட நோய்களுக்கும் ஈஷா யோகா நல்ல நிவாரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, உள்நிலையில் தெளிவு, அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவித்து, இளைஞர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி இலக்குகளை அடைந்திட இந்த யோகப் பயிற்சி அற்புத வாய்ப்பாக அமையும்.
Hindusthan Samachar / V.srini Vasan