Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 6 டிசம்பர் (ஹி.ச.)
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம், 25ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, 27ம் தேதி கம்பங்கள் நடப்பட்டன. இதைத்தொடர்ந்து பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கினார்கள்.
தினந்தோறும் பக்தர்கள் புனிதநீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ராஜலட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
நாளை(டிச 07) காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக இன்று(டிச 06) இரவு முதலே குண்டத்திற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் துவங்க உள்ளன.
நாளை காலை தலைமை பூசாரி குண்டம் இறங்கி துவக்கி வைத்த பிறகு காப்பு கட்டி விரதமிருந்து வரும் பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். நாளை காலை, 11:00 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / vidya.b