Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 6 டிசம்பர் (ஹி.ச.)
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து திருப்பரங்குன்ற விவகாரம் சம்பந்தமாக மனு வழங்கப்பட்டது.
பீமாராவ் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு இமக சத்திரியர்கள் பேரவை சார்பாக மாநிலத் தலைவர் மலைக்கோட்டை தர்மா அவர்கள் தலைமையிலும் சிறப்பு அழைப்பாளராக சிவசேனா தமிழகம் மாநில தலைவர் சி கே பாலாஜி கலந்து கொண்டார்.
மதுரை திருப்பரங்குன்றம் இந்துத் தமிழன் கலாச்சாரமான கார்த்திகை தீபம் 100 ஆண்டுகளுக்கு மேலாக போராடி சிறை சென்று பல்வேறு வழக்குகள் வாங்கி நடை முறைப்படுத்தாமல் இருந்தது.
மீண்டும் கார்த்திகை தீபம் இந்த வருடம் மூன்றாம் தேதி ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதை திட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் திராவிட மாடல் அமைச்சர் சேகர்பாபு அவரையும்,
திருப்பரங்குன்றம் இந்து அறநிலை துறை அதிகாரியையும் பணி நீக்க செய்ய வேண்டும்.
மதுரை எம்பி வெங்கடேசன் தொடர்ந்து இந்து தமிழன் கலாச்சாரத்தை தவறாக பேசி சித்தரித்து வருகிறார்.
அவரை கைது செய்ய வேண்டும்.
என்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பீமாராவ் ஜீ என்ற அம்பேத்கார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அவரிடம் மனு அளித்துள்ளார்.
Hindusthan Samachar / Durai.J