இண்​டிகோ விமான நிறு​வனத்​துக்கு மட்​டும் சிவில் விமான போக்​கு​வரத்து இயக்​குநரகம் சலுகை - இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்
புதுடெல்லி, 6 டிசம்பர் (ஹி.ச.) ​​வி​மானிகள் பணிநேர வரம்பு விதி​களின் 2-ம் கட்ட அமலாக்கத்​தின்​கீழ், இண்​டிகோ விமான நிறு​வனத்​துக்கு மட்​டும் சிவில் விமான போக்​கு​வரத்து இயக்​குநரகம் (டிஜிசிஏ) சலுகை அளித்​துள்​ளது. இதற்கு ‘ஏர்​லைன்ஸ் பைலட்ஸ் அசோ
இண்​டிகோ விமான நிறு​வனத்​துக்கு மட்​டும் சிவில் விமான போக்​கு​வரத்து இயக்​குநரகம் சலுகை - இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்


புதுடெல்லி, 6 டிசம்பர் (ஹி.ச.)

​​வி​மானிகள் பணிநேர வரம்பு விதி​களின் 2-ம் கட்ட அமலாக்கத்​தின்​கீழ், இண்​டிகோ விமான நிறு​வனத்​துக்கு மட்​டும் சிவில் விமான போக்​கு​வரத்து இயக்​குநரகம் (டிஜிசிஏ) சலுகை அளித்​துள்​ளது.

இதற்கு ‘ஏர்​லைன்ஸ் பைலட்ஸ் அசோசி​யேஷன் ஆப் இந்​தி​யா’ கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது.

இண்டிகோ விமானங்​களின் சேவை ரத்து மற்​றும் தாமதத்​தால் பயணி​கள் கடும் பாதிப்பை சந்​தித்​துள்​ளனர்​. இந்​நிலை​யில் விமானிகள் பணிநேர வரம்பு விதி​களை இண்​டிகோ விமான நிறு​வனத்​துக்கு மட்​டும் சிவில் விமான போக்​கு​வரத்து இயக்​குநரகம் சலுகை அளித்​துள்​ளது.

இதற்கு கண்​டனம் தெரி​வித்​து இயக்​குநரகத்​துக்கு விமானிகள் சங்​கம் எழு​தி​யுள்ள கடிதம்:

எந்த விமான நிறு​வனத்​துக்​கும் வணிக நலன்​களின் அடிப்​படை​யில் விலக்​கு​கள், சலுகைகள் வழங்​கப்​ப​டாது என்று கடந்த நவ.24-ம் தேதி நடந்த கூட்​டத்​தில் சிவில் விமான போக்​கு​வரத்து இயக்​குநரகம் உறு​தி​யளித்​தது. அதற்கு மாறாக தற்​போது இண்​டிகோவுக்கு சலுகை வழங்​கப்​பட்​டுள்​ளது. விமானிகள் பணி நேர வரம்பு விதி​கள் மனித உயிர்​களை பாது​காப்​ப​தற்​காகவே உள்​ளன. இந்த வரம்​பு​களை தளர்த்​து​வது விமானிகள், பயணி​கள் மற்​றும் விமானங்​களுக்கு ஏற்​றுக் கொள்ள முடி​யாத ஆபத்தை ஏற்​படுத்​தும்.

இண்​டிகோவுக்கு வழங்​கப்​பட்ட சலுகை மூலம், இரவு பணிக்​கான வரையறை தளர்த்​தப்​பட்​டுள்​ளது. மேலும், இரவு நேரத்​தில் தரை​யிறங்க அனு​ம​திக்​கப்​பட்ட விமானங்​களின் எண்​ணிக்கை 2-ல் இருந்து 4 ஆக இரட்​டிப்​பாக்​கப்​பட்​டுள்​ளது.

இது விதி​களுக்கு முற்​றி​லும் எதி​ரானது. வணிக நலனுக்​காக பயணி​களின் பாது​காப்பை கேள்விக் குறி​யாக்ககூடாது.

இந்த சலுகைகளை ரத்து செய்​யா​விட்​டால் ஏற்​படும் எந்த விபத்​துக்​கும், உயி​ரிழப்​புக்​கும் இயக்​குநரகமே நேரடி பொறுப்பாகும்.

இவ்​வாறு கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM