கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சியில் - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் 46.30 கோடி ரூபாய் மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் தமிழக அரசு அமைத்து வருகிறது. விதிகளுக்கு புறம்பாகவும் உரிய அனுமதி பெறாமல் அமைக்கும்
Kallakurichi


சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சியில் - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் 46.30 கோடி ரூபாய் மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் தமிழக அரசு அமைத்து வருகிறது.

விதிகளுக்கு புறம்பாகவும் உரிய அனுமதி பெறாமல் அமைக்கும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி

குமரேசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நிலத்தை வகை மாற்றம் செய்ய எந்தவிதமான உத்தரவும் அரசு பிறப்பிக்க வில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வருவாய் ஆவணங்களில் பேருந்து நிலையம் அமைக்கும் இடம் விவசாய நிலத்தின் ஒரு பகுதியாக உள்ளது எனவும் விவசாய நிலத்தில் சாலை அமைப்பது கட்டுமானம் மேற்கொள்வது போன்ற எந்த பணிகளையும் அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிலத்தின் அனைத்து வருவாய் ஆவணங்கள் சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வு உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ