கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டி - ஆயிரத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் பங்கேற்பு
கோவை, 6 டிசம்பர் (ஹி.ச.) கோவையில் 37 வது மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, கராத்தே கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி கோவை இந்துஸ்தான் கல்வி வளாகத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதில், ஆறு வ
More than a thousand karate players participated in the district-level karate competition held in Coimbatore.


More than a thousand karate players participated in the district-level karate competition held in Coimbatore.


கோவை, 6 டிசம்பர் (ஹி.ச.)

கோவையில் 37 வது மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி,

கராத்தே கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி கோவை இந்துஸ்தான் கல்வி வளாகத்தில் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதில், ஆறு வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியை சென்சாய் டாக்டர். கராத்தே வீரமணி தலைமை ஏற்க, திமுக மாநகர் மாவட்ட பொருளாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர்கள்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

வயது மற்றும் எடைப்பிரிவுகளில், கட்டா மற்றும் குமித்தே ஆகிய போட்டிகள் நடைபெற்றன..

மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் கோவை,மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

இதில் வெற்றி பெறும் வீரர்,வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர் வீரமணி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர்,

தமிழக அரசு தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் ஊக்குவித்து வருவதாக கூறிய அவர்,இதனால் தேசிய,சர்வதேச போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பது அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

Hindusthan Samachar / V.srini Vasan