புரட்சிகர சிந்தனைகளை எங்களைப் போன்ற பிள்ளைகள் நெஞ்சில் விதைத்த அரசியல் பேராசான் அம்பேத்கர் - சீமான் புகழாரம்
சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.) அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே என்று வழிகாட்டிய பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் அவரது தியாகத்திற்கு பெரும்புகழ் போற்றுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ச
Tw


சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.)

அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே என்று வழிகாட்டிய பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் அவரது தியாகத்திற்கு பெரும்புகழ் போற்றுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்து தந்த பேரறிஞர் , உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குறியீடு அம்பேத்கர்

சாதிய இழிவைத் துடைத்தெறியப் போராடாமல் இருப்பதைவிட, செத்து ஒழிவதே மேலானது.

நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யாரும் அடிமை இல்லை. கோயில்களில் எப்போதும் ஆடுகளைத் தான் பலியிடுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல என்று உலகிற்கு உணர்த்தியவர்

சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமன்படுத்தாது, சமூக முன்னேற்றம், சமூக மேம்பாடு என்று பேசுவதெல்லாம் சாக்கடைக்குழியின் மேலே போடுகிற மல்லிப் பந்தலுக்கு ஒப்பானது என்பது போன்ற புரட்சிகர சிந்தனைகளை எங்களைப் போன்ற பிள்ளைகள் நெஞ்சில் விதைத்த அரசியல் பேராசான்

அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே என்று வழிகாட்டிய பெருந்தகை.

கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ