Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 6 டிசம்பர் (ஹி.ச.)
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (டிச 06) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகிறார்கள்.
அதன்படி கடலுார் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் வழிபாட்டுதலங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் பயணிகளின் உடைமைகளை போலீசார்மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் ரயில் நிலையங்கள் மற்றும் கடலுார் பஸ்நிலையம், ஆல்பேட்டை மற்றும் சோரியாங்குப்பம் சோதனைச்சாவடிகளில் போலீசார் வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b