இரண்டு நாட்கள் இந்திய  பயணத்தை நிறைவு செய்த அதிபர் புதின் ரஷியா புறப்பட்டார்
புதுடெல்லி, 6 டிசம்பர் (ஹி.ச.) 2 நாட்கள் அரசு முறை பயணமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புதன்கிழமை இரவு டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து, கடந்த 2 நாட்களாக புதின் இந்தியாவில் பல்வேறு நிக
இரண்டு நாட்கள் இந்திய  பயணத்தை நிறைவு செய்த அதிபர் புதின்  ரஷியா புறப்பட்டார்


புதுடெல்லி, 6 டிசம்பர் (ஹி.ச.)

2 நாட்கள் அரசு முறை பயணமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புதன்கிழமை இரவு டெல்லி வந்தார்.

அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

இதையடுத்து, கடந்த 2 நாட்களாக புதின் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அதன்படி நேற்று 23வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் கலந்து கொண்டனர்.

பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த பயணத்தின்போது இந்தியா , ரஷியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில் 2 நாட்கள் அரசு பயணத்தை நிறைவு செய்த அதிபர் புதின் நேற்று இரவு ரஷியா புறப்பட்டு சென்றார்.

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று அதிபர் புதினை வழி அனுப்பி வைத்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM