Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 6 டிசம்பர் (ஹி.ச.)
இயேசுகிறிஸ்து உலகில் அவதரித்த டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்தவ பெருமக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாகயாக கோலாககமாகக் கொண்டாடப் படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
அந்தவகையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக அளவில் வசித்து வரும் கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். இதன்காரணமாக கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், அலங்கார விளக்குகள், குடில்கள் விற்பனையும் இப்போதே மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பாளையங்கோட்டையில் ஏராளமான கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்பனை கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் முக்கிய நகரங்களிலும் விற்பனை சூடுபிடித்துள்ளது.
பாளை முருகன்குறிச்சியில் உள்ள டயோசீசன் டெப்போவில் கண்ணைக் கவரும் வகையில் விதவிதமான கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனைக்காக வந்துள்ளன. மேலும் இந்த ஆண்டு புதி தாக எல்இடி ஸ்டார்கள் வித விதமான வண்ணங்களில் கண்ணை கவரும் வகையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதேபோல் எல்இடி ஸ்டார்களும் தரத்திற்கேற்ப ரூ.300 முதல் ரூ.3000 வரை விற்கப்படுகின்றன. மேலும் சீரியல் லைட்டுகள் ரூ.300 முதல் ரூ.1500 வரை விற்கப்படுகின்றன. 4 ஸ்டார் லைட்டுகள் புதிதாக விற்பனைக்கு வந்துள்ளன.
அத்துடன் 5 பெல் அலங்கார விளக்குகள், தோரண விளக்குகள் விதவிதமான வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை தவிர குடில் செட்டுகள் தற்போது புது மாடல்களில் வந்துள்ளன.
இவை ரகத்திற்கு ஏற்றாற்போல் தலா 500 ரூபாயில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் வரை விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ரெசின், பிளாஸ்டா பாரீஸ் ஆகியவை 3 இன்ச் முதல் சுமார் 1 அடி உயரம் வரை தேவ தூதர் சிலைகளுடன் விற்பனைக்கு வந்துள்ளன.
இவற்றை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b