Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 6 டிசம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம்
சோழவந்தான் பேரூராட்சி
5 -வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி வெளியேறாத நிலையில் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இது இது சம்பந்தமாக
சோழவந்தான் திமுக வெங்கடேசன் எம் எல் ஏ மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியில் பட்டியல் இன மக்கள் 5 க்கும் மேற்பட்டோரை அனுப்பி கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வைத்த அவலம் அரங்கேறியுள்ளது.
எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் பட்டியலின மக்கள் கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்தது தீராத தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் உடனடியாக தேசியதாழ்த்தப்பட்டோர் ஆணையம் சம்பந்தப்பட்ட சோழவந்தான் வைத்தியநாதபுறம் பகுதியில் நேரில் ஆய்வு செய்து உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட வைத்தியநாதபுரம் பகுதியில் உடனடியாக சோழவந்தான் திமுக வெங்கடேசன் எம் எல் ஏ நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட கழிவுநீர் கால்வாயை முழுவதுமாக ஜேசிபி எந்திரன் மூலம் தூய்மையாக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கழிவுநீர் கால்வாய்
உடனடியாக கட்டித் தர வேண்டும்.
என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கள் பகுதிக்கு திமுக வெங்கடேசன் எம் எல் ஏ வராத பட்சத்தில் வாக்குகள் கேட்டு இனிமேல் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது எனவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
பட்டியலின மக்கள் கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தி உள்ளது
Hindusthan Samachar / Durai.J