Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதை அரசே எடுத்து நடத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 கோடிக்கு அளவிற்கு மது விற்பனை செய்யப்படுகிறது.
வார இறுதி நாட்களில் ரூ.120 முதல் ரூ.150 கோடி மது விற்பனையாகும். அதுவும் பண்டிகை நாட்களான பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற தினத்தில் தமிழக அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மது விற்பனை செய்யப்படும்.
கடந்த தீபாவளி பண்டிகைக்கு மட்டும் ரூ.790 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. அதுவும் சென்னையை விட மதுரை மண்டலத்தில் ரூ.170 கோடிக்கு மது விற்பனையானது. குறிப்பாக வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் விளங்குகிறது. இதில் வரும் வருமானத்தை வைத்து தான் அரசு இயந்திரமே இயங்குவதாக கூறப்படுகிறது.
மேலும் மழை வெள்ளம் புயல் மட்டுமில்லாமல் பண்டிகை காலங்களில் மற்ற அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மட்டும் விடுமுறை என்பதே இல்லை. எனவே தமிழக அரசு சார்பாக ஆண்டுக்கு குறிப்பிட்ட 8 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 2025ம் ஆண்டு முடிய இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில் 2026ம் ஆண்டுக்கான டாஸ்டாக் விடுமுறை நாட்கள் வெளியாகியுள்ளன.
அதாவது,
ஜனவரி 16 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 26ம் தேதி திங்கள்கிழமை குடியரசு தின விழா, பிப்ரவரி 01 ஞாயிற்றுக்கிழமை வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், ஏப்ரல் 31 செவ்வாய்கிழமை மகாவீர் ஜெயந்தி, மே 1 வெள்ளிக்கிழமை தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சனிக்கிழமை சுதந்திர தினம், செப்டம்பர் 26 புதன்கிழமை மிலாது நபி, அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 8 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN