Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 6 டிசம்பர் (ஹி.ச.)
கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யூபோரியா 2025 ஆண்டு விழா நடந்தது,
இந்த விழாவில் ஸ்டேன்ஸ் துணைத் தலைவர் மஞ்சுளா நரசிம்மன் கலந்து கொண்டு மாணவியருக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து கருத்துரை வழங்கினார்.
கௌரவ விருதினராக நிர்மலா மகளிர் கல்லூரி முதல்வர் சகோதரி மேரி ஃபேபியோலா கலந்து கொண்டார்.
சிறப்பு அழைப்பினர்களாக சௌரிபாளையம் பிரசன்டேஷன் கான்வென்ட் கரஸ்பாண்டன்ட் சகோதரி தெரேசா, ரவேல் ப்ரொவென்ஸ் துணை தலைவர் சகோதரி மேரி ஜெனட் மெஜெல்லா, சுப்பீரியர், ஆல்மா மாட்டர் கான்வென்ட்சகோதரி அல்போன்ஸ், பள்ளி முதல்வர் சகோதரி லில்லி மேரி, துணை முதல்வர் சகோதரி ஆலிஸ் பெல்சியா, பாதிரியார் கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் மாணவியரின் கண்ணை கண்கவரும் நடனம் மற்றும் விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை வெகுவாக கவர்ந்தது.
Hindusthan Samachar / V.srini Vasan