Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 6 டிசம்பர் (ஹி.ச.)
அமெரிக்காவில் தங்கி பணிபுரிய வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது.
இதனால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவதாக கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எச்-1பி விசாவுக்கு கடும் கட்டுபாடுகளை விதித்தார். எச்-1பி கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தினார்.
இந்த நிலையில் எச்-1பி விசா விண்ணப்பத்தாரர்களுக்கு புதிய கட்டுபாட்டை டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது.
அதன்படி எச்-1பி மற்றும் எச்-4 விசா விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக வலைத்தள கணக்கை அனைவரும் பார்க்கும் வகையில் பொதுவில் வைக்கப்பட வேண்டும் என்றும், அவர்களது வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும் என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 15-ந்தேதி முதல் விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக ஊடக சுயவிவரங்களை பொது அமைப்பிற்கு மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM