Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.)
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் ரானுவ வீரர் சக்திவேல் மரணமடைந்துள்ளதற்கு டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுடனான மோதலில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த ராணுவ வீரர் சக்திவேல் அவர்கள் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
தேசப்பாதுகாப்பு பணியின் போது பயங்கரவாதிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு உயிர்நீத்த ராணுவ வீரர் சக்திவேல் அவர்களுக்கு எனது வீரவணக்கத்தை செலுத்துவதோடு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ