Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச)
அம்பேத்கர் நினைவு நாளில் அவர் காண விரும்பிய சாதி, வர்க்க, பாலின பேதமற்ற சமத்துவ சமூகத்தைக் கட்டமைத்திட உறுதியேற்போம் என தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கற்பி, கிளர்ச்சி செய், ஒன்றுசேர், புரட்சி செய் - பாபாசாகேப் அம்பேத்கர்
இந்திய அரசியலமைப்பின் சிற்பி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, தவெக-வின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் அவர் காண விரும்பிய சாதி, வர்க்க, பாலின பேதமற்ற சமத்துவ சமூகத்தைக் கட்டமைத்திட உறுதியேற்போம்.
சுதந்திரம்,சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட, உண்மையான சமூக சனநாயகம் மலர வேண்டும் என்கிற தீரா வேட்கையோடு அறிவாயும் ஏந்தி தனது வாழ்நாளின் இறுதிவரை போராடிய ஒப்பற்ற பெருந்தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.
சமத்துவ சமூகம் உருவாகும் வரை அவர் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறார். அண்ணல் அம்பேத்கர் அவர்களை, அவரது நினைவு நாளில் வணங்கிப் போற்றுகிறோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ