ஸ்கேம் மெசேஜ்களை கண்டுபிடிக்க கூகுள் சர்க்கிள் டூ சர்ச் அல்லது கூகுள் லென்ஸ் இருக்கு!
சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.) ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் சிம் கார்டு இருந்தால் போதும், உங்களது கான்டெக்ட்டில் யாருமே இல்லையென்றாலும் மெசேஜ்கள் மற்றும் கால் வந்து கொண்டே இருக்கும். யார் அனுப்புகிறார்கள் என்று தெரியாது. ஆனால், உங்களுக்கு இவ்வளவு பணம் கிர
ஸ்கேம் மெசேஜ்களை கண்டுபிடிக்க கூகுள் சர்க்கிள் டூ சர்ச் அல்லது கூகுள் லென்ஸ் இருக்கு!


சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.)

ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் சிம் கார்டு இருந்தால் போதும், உங்களது கான்டெக்ட்டில் யாருமே இல்லையென்றாலும் மெசேஜ்கள் மற்றும் கால் வந்து கொண்டே இருக்கும். யார் அனுப்புகிறார்கள் என்று தெரியாது. ஆனால், உங்களுக்கு இவ்வளவு பணம் கிரெடிட் செய்யப்பட்டுள்ளது, உங்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக ஆஃபர் வந்துள்ளது என்று ஆசை வார்த்தைகளுடன் மெசேஜ்கள் வருவது வந்துகொண்டிருக்கும்.

அதே நேரத்தில் பேங்கில் இருந்து அனுப்புவதை போலவும் பொய்யான மெசேஜ்கள் வருகின்றன. இது உண்மையா? பொய்யா? என்று யோசிக்கவே தனியாக நேரம் ஒதுக்க வேண்டி இருக்கிறது.

ஆனால், கூகுள் நிறுவனம் அதை சில நிமிடங்களில் டிடெக்ட் செய்து கொடுத்துவிடும். அந்த மெசேஜ்களில் இருக்கும் தகவல்களை எடுத்துக்கொண்டு அது உண்மையா பொய்யா என்பதை குறித்த ஒரு பகுப்பாய்வை உங்களுக்கு கொடுக்கும்.

இதை வைத்து எளிதாக நீங்கள் அதனுடைய நோக்கத்தை கண்டுப்பிடித்துவிடலாம். இந்த ஸ்கேம் டிடெக்சன் ஆனது மெசேஜிங் ஆப்களில் (Messaging Apps) மட்டும் கொடுக்கப்படாது. சோஷியல் மீடியா ஆப்களிலும் (Social Media Apps) பயன்படுத்தும்படி கொடுக்கப்படுகிறது.

ஆகவே, பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற ஆப்களிலும் இதை பயன்படுத்தி ஸ்கேம் டிடெக்சன் செய்து கொள்ளலாம்.

சர்க்கிள் டூ சர்ச்

உங்களது ஸ்கிரீனில் தெரியும், டெக்ஸ்ட், போட்டோ போன்ற ஆப்ஜெக்ட்களை சர்க்கிள் செய்தால் போதும், அது குறித்த விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும். இதே போலத்தான் ஸ்கேம் மெசேஜ்களுக்கான சர்க்கிள் டூ சர்ச் என்ஹான்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆகவே, மெசேஜிங் ஆப்கள் அல்லது சோஷியல் மீடியா ஆப்களில் உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்படி ஏதாவது மேசேஜ்கள் வந்தால், அதை ஓப்பன் செய்து ஹோம் பட்டனை (Home Button) தேர்வு செய்யுங்கள். இப்போது அந்த மெசேஜை சர்க்கிள் செய்ய வேண்டும்.

இப்போது, அதில் இருக்கும் விவரங்கள் ஏஐ மூலமாக பகுப்பாய்வு செய்யப்படும். இறுதியாக அது குறித்த விளக்கம் கொடுக்கப்படும்.

இது ஸ்கேம் போல தெரிகிறது, இதில் உங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பேங்க் விவரங்களை கொடுக்க வேண்டாம், இந்த தளத்தின் பெயரில் மெசேஜ் வந்துள்ளது. ஆகவே, அதனுடயை அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு சென்று செக் செய்து கொள்ளுங்கள் என்று விளக்கம் கொடுக்கும்.

அதே போல அதிகாரப்பூர்வ லிங்குகளையும் கொடுக்கும். இதற்கு சென்று செக் செய்து கொள்ளலாம்.

கூகுள் லென்ஸ்

கூகுள் ஆப் (Google App) இருக்க வேண்டும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஎஸ் யூசர்களுக்கு கிடைக்கிறது. இதிலும் அந்த சந்தேகத்துக்குரிய மெசேஜ்களில் ஸ்கேம் டிடெக்ட் செய்து கொள்ளலாம்.

அந்த மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து கொள்ளுங்கள், கூகுள் ஆப் அல்லது ஸ்மார்ட்போனின் ஹோம் பேஜ்ஜில் இருக்கும் ஸ்கேனிங் ஆப்ஷனுக்கு சென்று அந்த ஸ்கிரீன்ஷாட்டை கொடுங்கள்.

இதிலும் சர்க்கிள் டூ சர்ச் போலவே அந்த மெசேஜ் முழுமையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, அது குறித்த விளக்கங்கள் கொடுக்கப்படும். இதன் மூலம் ஸ்கேம் மேசெஜ் குறித்து நேரத்தை வீணடிக்காமல் அதை தவிர்த்துவிடலாம்.

அதே நேரத்தில் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமலும் தப்பிக்கலாம். இந்த கூகுள் லென்ஸ் மற்றும் சர்ச்சிள் டூ சர்ச்ச் ஒட்டுமொத்த ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் யூசர்களுக்கும் கிடைக்கிறது.

மேலும், கூகுள் லென்ஸ் மூலமாக டெக்ஸ்ட்களை மட்டுமல்லாமல், போட்டோக்கள், அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட ஆப்ஜெக்ட்களையும் ஸ்கேன் செய்து அதன் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அதே போல கேமரா மூலம் ரியல் டைமில் விவரங்களை பெற்று கொள்ளலாம். இதில் டிரான்ஸ்லேஷன் ஆப்ஷனும் இருக்கிறது. எந்த மொழியில் இருக்கும் விவரங்களையும் உங்களுக்கு தெரிந்து மொழியில் பார்த்து கொள்ளவும் முடியும்.

Hindusthan Samachar / JANAKI RAM