காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை 149 பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.) கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை (திங்கட்கிழமை) காலை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு காஞ்சீபுரம்
ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு நாளை காஞ்சீபுரத்தில் 149 பள்ளிகளுக்கு விடுமுறை


சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.)

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை (திங்கட்கிழமை) காலை நடைபெற இருக்கிறது.

இதனை முன்னிட்டு காஞ்சீபுரம் மாநகரத்தில் உள்ள 149 பள்ளிகளுக்கு நாளை

(8-ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நளினி வெளியிட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM