பகவத் கீதை பாராயண நிகழ்ச்சியில் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
கொல்கத்தா, 7 டிசம்பர் (H.S.) மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று (டிச 07) பிரம்மாண்டமான முறையில் பகவத் கீதை பாராயண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனாதன சம்ஸ்கிருதி சன்சத் மற்றும் பல்வேறு இந்து அ
பகவத் கீதை பாராயண நிகழ்ச்சியில் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு


கொல்கத்தா, 7 டிசம்பர் (H.S.)

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று (டிச 07) பிரம்மாண்டமான முறையில் பகவத் கீதை பாராயண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனாதன சம்ஸ்கிருதி சன்சத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில், சுமார் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் கீதை சுலோகங்களை உச்சரித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஆன்மீக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆன்மீக நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ், தீரேந்திர சாஸ்திரி மற்றும் சுவாமி ஞானானந்தாஜி மகராஜ் உள்ளிட்ட முக்கிய ஆன்மீகத் தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வழிநடத்துகின்றனர்.

இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஆன்மீக நோக்கம் கொண்டது என்றும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலேயே நடத்தப்படுகிறது என்றும் அமைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் நெருங்கும் வேளையில் நடைபெறும் இந்த நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், மக்கள் இந்த நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று தீவிரமாக அழைப்பு விடுத்துள்ளனர்.

அதேவேளையில், இதுபோன்ற நிகழ்வுகளை ‘மதரீதியான போட்டி’ என்று முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு விமர்சித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b