Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 7 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த சில நாட்களாகக் கடுமையான நிர்வாக நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. புதிய பணி நேர விதிகள் அமலாக்கம், பனிமூட்டம் மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் போதிய ஊழியர்கள் இல்லாமல் விமானச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதன் காரணமாக விமான நிலையங்களிலேயே ஆயிரக்கணக்கான பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு விமானங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.இதனால் அந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பயணத்தடை ஏற்பட்டு அவதிப்பட்டனர்.
இந்தநிலையில், இண்டிகோ சேவை தொடர்ந்து படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று (டிச 06) 113 இடங்களுக்கு 700 விமானங்களை இயக்கிய நிலையில், இன்று (டிச 07) மாலைக்குள் 1,500-க்கும் அதிகமான சேவை உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் 138 இடங்களில் 135 இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், 95 சதவிகித விமான சேவை இணைப்பு மீட்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b