டெல்லியில் மேலும் மோசமடையும் காற்றின் தரம் - முதியோர் மற்றும் குழந்தைகள் பாதிப்படையும் அபாயம்!
புதுடெல்லி, 7 டிசம்பர் (ஹி.ச.) ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் டெல்லியில் ஏற்படும் காற்று மாசினால் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். டெல்லி மக்கள் தினமும் பல நூறு சிகரெட்டுகளுக்கு சமமான நஞ்சை காற்றின் வழியாக சுவாசிக்கிறார்கள் என்று பல ஆய
டெல்லியில் மேலும் மோசமடையும் காற்றின் தரம்


புதுடெல்லி, 7 டிசம்பர் (ஹி.ச.)

ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் டெல்லியில் ஏற்படும் காற்று மாசினால் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

டெல்லி மக்கள் தினமும் பல நூறு சிகரெட்டுகளுக்கு சமமான நஞ்சை காற்றின் வழியாக சுவாசிக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, காற்று மாசை கட்டுப்படுத்த மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

பனிகாலம் தொடங்கியதால், காற்று மாசின் அளவு இன்னும் மோசடையும் நிலையில் டெல்லி உள்ளது.

அதற்கேற்றார் போல இன்றைய அளவீடுகள் இருந்துள்ளன.

டெல்லியில் காற்றின் தரக்குறியீடு இன்று (டிச 07) 305 (மிக மோசம்) என்ற நிலையில் உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 279 தரக்குறியீட்டில் இருந்த காற்றின் தரம் இந்த வாரம் 305 ஆக மோசமடைந்துள்ளது.

இதனால், முதியோர், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b