Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 7 டிசம்பர் (ஹி.ச.)
கோவை, சூலூர் பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது தொழிலாளி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி சூலூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 85 வயது மூதாட்டி மாலையில் டி.வி பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது வீட்டுக்குள் புகுந்த சாகுல் ஹமீத் பாட்டியை மிரட்டி கழுத்தில் அணிந்து இருந்த ஐந்து பவுன் நகையை பறித்தார். பின்னர் அந்த பாட்டியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தட்டி ஓடி விட்டார்.
காயம் அடைந்த பாட்டி வீட்டை விட்டு வெளியே வந்து தனக்கு அவமானமாகி விடுமோ என்று பயந்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்களிடம் நகையை மட்டும் ஆசாமி பறித்து சென்று விட்டதாக கூறி உள்ளார்.
இதை அறிந்த சூலூர் போலீசார் வாலிபரை தேடி வந்தனர். இந்நிலையில் பாட்டி வீட்டில் அழுது கொண்டே இருந்தார். அப்பொழுது அவரது பேரன் உறவினர்கள் பாட்டியிடம் விசாரித்து உள்ளனர். அப்பொழுது தான் தன்னை அந்த வாலிபர் பாலில் பலாத்காரம் செய்ததாகவும், செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் வெளியில் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று கூறாமல் இருந்து விட்டதாக கூறுகிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மீண்டும் சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கு இடையே ஹமீது சூலூர் பகுதியில் சாலையில் செல்லும் போது வாகன விபத்தில் சிக்கி கை முறிந்த நிலையில் சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவல் துறையினர் செல்போன் மூலம் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கண்டறிந்தனர் இதை அடுத்து காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் ஹமீது குறித்து விவரங்களை கூறி கேட்டனர்.
அப்பொழுது தற்பொழுது தான் வெளியில் செல்வதாக கூடியுள்ளனர். உடனே அவரை மடக்கிப் பிடித்த கைது செய்த காவல் துறையினர் அவர் மீது கற்பழிப்பு, கொள்ளை, அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து குற்றச் செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த ஆசாமி செல்போனில் கைப்பற்றி ஆய்வு செய்தபோது அந்த மூதாட்டியிடம் பலாத்காரம் வீடியோ உட்பட ஏராளமான ஆபாச வீடியோக்களும் இருந்தன.
இந்த வழக்கில் விபசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த விசாரணை நடத்திய நீதிபதி சுந்தர்ராஜ் குற்றம் சாட்டப்பட்ட ஹமீது மீது பத்தாண்டு சிறை தண்டனையும், ரூபாய் 1,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Hindusthan Samachar / V.srini Vasan