நியாய விலை கடையில் இரவு நேரத்தில் கோதுமை மூட்டைகளை லாரியில் கடத்த முயற்சி - ஊழியர்களை சிறை பிடித்த பொது மக்கள்
கோவை, 7 டிசம்பர் (ஹி.ச.) கோவை சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் திலகர் வீதியில் கூட்டுறவு நியாயவிலைக் கடை எண் 101 செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் ரேஷன் பொருட்கள் எடுத்துச் செல்லும் லாரி வந்து நின்றது. அதில் இருந்
An attempt to smuggle wheat sacks by truck at night from the fair price shop—employees were detained—has caused a stir in Coimbatore.


An attempt to smuggle wheat sacks by truck at night from the fair price shop—employees were detained—has caused a stir in Coimbatore.


கோவை, 7 டிசம்பர் (ஹி.ச.)

கோவை சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் திலகர் வீதியில் கூட்டுறவு நியாயவிலைக் கடை எண் 101 செயல்பட்டு வருகிறது.

இந்த கடையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் ரேஷன் பொருட்கள் எடுத்துச் செல்லும் லாரி வந்து நின்றது.

அதில் இருந்து மூன்று நபர்கள் நியாய விலைக் கடையை திறந்து உள்ளனர்.

கடையில் இருந்து கோதுமை மூட்டைகளை எடுத்து லாரியில் ஏற்றி உள்ளனர்.

அருகில் இருந்த பொதுமக்கள் கண்டு அவர்களிடம் யார் நீங்கள் என்ன மூட்டை என கேட்டு உள்ளனர்.

அப்போது அவர்கள் சரியான பதில் சொல்ல வில்லை. அதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லாரியையும் மூட்டையை ஏற்றியவர்களையும் சிறை பிடித்தனர்.

இதனிடையே லாரியில் ஏற்றியது என்ன மூட்டை என்று பார்த்த போது அது கோதுமை மூட்டை என்பதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடந்த ஒரு வாரமாக இந்த கடையில் கோதுமை கேட்ட போது வரவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனிடையே இந்த சம்பவத்தை தொடர்ந்து நியாய விலைக் கடையின் அட்டையை சிலர் ஆய்வு செய்த போது கோதுமை வழங்கப்பட்டதாக பதிவு ஆகியும் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

எனவே இது குறித்து சாய்பாபா காலனி சி3 காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கோதுமை மூட்டை எடுத்த மூன்று நபர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

மேலும் இது குறித்து பொதுமக்கள் அனைவரும் கையெழுத்து போடப்பட்ட கடிதம் ஒன்றை கொண்டுவர கூறி அழைத்து சென்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / V.srini Vasan