Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர் , 7 டிசம்பர் (ஹி.ச.)
திருவள்ளூரின் தற்போதைய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு நாள் தோறும் 80 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் சென்னை மாநகரப் பேருந்துகள் திருவள்ளூர் வந்து, அங்கிருந்து ஆவடி, பூந்தமல்லி, கோயம்பேடு, தியாகராய நகர், செங்குன்றம், மந்தவெளி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 80 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல் 50க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும், திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இதனால் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில் திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள வேடங்கிநல்லூர் என்ற பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 2023 ஜூலை மாதம் ரூ.33 கோடி மதிப்பீட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.
இந்த பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் வந்து, நின்று, செல்வதற்கு எதுவாக தீவிரமாக அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வணிக வளாகங்களும், போக்குவரத்து அலுவலகம் ஆகியவை கட்டும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b