Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.)
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 7-ம் நாள் நாடு முழுவதும் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையில் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த முப்படையினை சேர்ந்த வீரர்கள், ஊனமுற்ற வீரர்கள், முன்னாள் படைவீரர்களின் தியாகங்களை நினைவுகூறவும். அவர்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான கொடி நாள் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
இன்று (டிச 07) கொடி நாளை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
நமது நாட்டைப் பாதுகாக்கும் முப்படை வீரர்களின் வீரத்தைப் போற்றிடும் வகையிலும், போரில் தியாகம்புரிந்த வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் உதவிடும் வகையிலும், கொடி நாள் நிதிக்கான நன்கொடை அளித்தோம்.
நாட்டிற்குள் நாம் நல்வாழ்வு வாழ, தங்கள் உயிரையும் துச்சமென கருதி எல்லையைப் பாதுகாக்கும் படை வீரர்கள் என்றென்றும் நமது நன்றிக்குரியவர்கள்.
பரந்த மனப்பான்மையுடன் கொடி நாள் நிதி அளிப்போம்! படை வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என்றும் துணை நிற்போம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b