Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச)
தமிழ்நாட்டில் 16வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி முடிவடைகிறது.
அதற்கு முன்னர் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 4 ஆம் தேதி இந்த பணிகள் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த படிவங்களை சமர்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி வரை நடைப்பெறும். அதன் பிறகு டிசம்பர் 12 முதல் 15 ஆம் தேதி வரை அட்டவணை புதுப்பித்தல் மற்றும் வரைவு பட்டியல் தயாரித்தல் பணிகள் நடைபெறும்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை தேர்தல் ஆணையம் வரும் 11ம் தேதி தொடங்குகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
Hindusthan Samachar / vidya.b