Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 7 டிசம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பாளையம் கிராமத்தை
சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் இவர்களின் குடும்ப சொத்தான புதுப்பாளையம்
ஆரணி வேலூர் நெடுஞ்சாலை கூட்ரோடு அருகில் உள்ள விவசாய நிலத்தை
புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்
கண்ணன் என்பவருக்கு 10செண்டு நிலமும் கண்ணனின் மாமியார் மணிமேகலைக்கு
கடந்த 2017ம் ஆண்டு கிரையமாக ராதாகிருஷ்ணன் விற்பனை செய்துள்ளார்.
மேலும் பின்னர் கண்ணன் மற்றும் மணிமேகலைக்கு குறைவான விலையில் நிலத்தை
விற்றுள்ளதாகவும் இதனால் இருதரப்பினருக்கும் 8ஆண்டுகளாக மோதல் ஏற்பட்டு
ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபட்டு நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் இன்று மணிமேகலை கணவர் மாசிலாமணி மகன் அஜித் ஆகியோர்
தங்களுடைய நிலத்திற்கு சென்று டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தனர்.
அப்போது குறுக்கீட்ட விவசாயி ராதாகிருஷ்ணன் மாசிலமணியிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் விவசாயி ராதாகிருஷ்ணன் தன்னுடைய
உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டார்.
இதில் தீ எரிந்து
விவசாயி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108
ஆம்பூலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.
இதனையடு:த்து தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் கவலைகிடமாக உள்ளதாக
மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவலிறந்த வந்த கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டத்தில் இருதரப்பினருக்கும் ஏற்கனவே நிலம் சம்மந்தமாக விரோதம்
இருந்துள்ளதாகவும் தற்போது நிலத்தை உழுது சென்ற போது மோதலில் விவசாயி
ராதாகிருஷ்ணன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள
முயன்றுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் போலீசார் கூறினார்.
ஆரணி அருகே
நிலம் தகராறு சம்மந்தமாக விவசாயி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயன்ற சம்பவம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் விவசாயி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ திகுதிகு எரிந்து விவசாயி அலறல்
சம்பவம் குறித்து வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி வருவது
குறிப்பிடதக்கது.
Hindusthan Samachar / Durai.J