Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை அண்ணாநகரில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகம் இயங்கி வருகின்றது. இந்த அலுவலகத்தில் இன்று (டிச 07) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து 6 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b