Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 7 டிசம்பர் (ஹி.ச.)
கேரளா மாநிலத்தில் 09-12-25, 11-12-2025 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியின் ஆதரவுடன் அதிமுக சார்பில் 22 பேர் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக களத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் 09-12-25, அன்று கேரளா மாநிலம் இடிக்கி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தேவிக்குளம் சட்டமன்ற தொகுதி, தேவிகுளம் கிராம பஞ்சாயத்து 14 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் , அதேபோல் 15 வது வார்டில் போட்டியிடும் முருகையா ஆகியோர்க்கு ஆதரவாக களத்தில் இரவு, பகலாக வீடு,வீடாக சென்று மக்களை சந்தித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு அதிமுகவிற்கு வாக்குகளை சேகரித்தார்.
முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம். ஆனந்தன், மேலும் திருப்பூர் ஒன்றிய கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், கேரளா பொறுப்பாளர் நாசர் ஆகியோரும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan