இலங்கை முன்னாள் அமைச்சர் செல்லையா ராஜதுரை சென்னையில் இன்று காலமானார்
சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.) சென்னையில் வசித்து வந்த இலங்கையின் முன்னாள் அமைச்சர் செல்லையா ராஜதுரை உடல்நலக்குறைவின் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 98 வயதான செல்லையா ராஜதுரை சிகிச்சை பலனின்றி இன்று (டிச 07) க
இலங்கை முன்னாள் அமைச்சர் செல்லையா ராஜதுரை சென்னையில் இன்று  காலமானார்


சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.)

சென்னையில் வசித்து வந்த இலங்கையின் முன்னாள் அமைச்சர் செல்லையா ராஜதுரை உடல்நலக்குறைவின் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

98 வயதான செல்லையா ராஜதுரை சிகிச்சை பலனின்றி இன்று (டிச 07) காலமானார்.

இலங்கை அமைச்சராக பணிபுரிந்த போது செல்லையா ராஜதுரை இலங்கை தமிழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

மேலும் இலங்கையின் மட்டக்களப்பு தொகுதியில் 1956 - 1989 வரை தொடர்ந்து 33 வருடங்கள் எம்பியாக இருந்துள்ளார்.

செல்லையா ராஜதுரை, தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b