Enter your Email Address to subscribe to our newsletters

கோவா, 7 டிசம்பர் (ஹி.ச.)
கோவா, அர்போரா பகுதியில் உள்ள இரவு விடுதியில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.
இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகக் கூறினார்.
மேலும், தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 நிவாரணமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.
தீ விபத்தில் 3 பேர் தீக்காயங்களால் உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறினார்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுதி சமையலறை ஊழியர்கள் என்றும், சுற்றுலாப் பயணிகள் 4 பேர் என்றும் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM