Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 7 டிசம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஐயர் பாடி J E பங்களா பகுதியைச் சேர்ந்த ரோசப் அலி மனைவி சஜிதா பேகம் இவருக்கு மூன்று குழந்தைகள் ஜோதிநக் கதம் ஜாகுர் அலாம் என்ற இரண்டு குழந்தைகள் தற்போது உள்ளது.
இவர் அசாமில் இருந்து வால்பாறை பகுதிக்கு குடிபெயர்ந்து சுமார் 5 வருடங்கள் ஆகியுள்ள நிலையில்வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த ஜைபிர் அலாம் என்ற ஐந்து வயது சிறுவனை தேயிலைத் காட்டிற்குள் பதுங்கி இருந்த சிறுத்தை கவ்விகொண்டு சென்றதை அருகில் உள்ளவர்கள் பார்த்து கூச்சலிட்டு மீட்க முயன்றனர்.
இதற்குள் சிறுத்தை சிறுவனை தேயிலை காட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளது.
உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பல மணி நேரம் தேடி மீட்டனர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து வனத்துறை மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
தற்போது வால்பாறை பகுதியில் ஜார்க்கண்ட் அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகள் மட்டுமே வனவிலங்குகள் தாக்குவதால் பாதிப்படைகின்றனர்.
புலம்பெயர்ந்த பிற மாநில தொழிலாளர்கள் உள்ளவர்கள் வால்பாறை பகுதியில் சுமார் 10,000 மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை செய்தும் மெத்தனப்போக்காக வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் சிறுவனின் உடலை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை (உடற்கூறு )ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்
Hindusthan Samachar / V.srini Vasan