Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 7 டிசம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் 10,656 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 10,656 மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற்று வருகின்றனர்.
எனவே இத்திட்டத்தினை உயர்கல்வி பயிலும் மாணவர்கள் உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b