கள்ளக்காதலனை கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலி உள்பட 10 பேர் கைது!
கிருஷ்ணகிரி, 7 டிசம்பர் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ்(32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் பிரசாந்த் என்பவரிடம் கார் ஓ
Krishnagiri Murder Case


கிருஷ்ணகிரி, 7 டிசம்பர் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ்(32).

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் பிரசாந்த் என்பவரிடம் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

அதுமட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி வானவில் நகர் பகுதியில் ஹரீஷ் என்பவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஓசூர் வானவில் நகரைச் சேர்ந்த மஞ்சுளா(35) என்ற பெண்ணுடன் ஹரீஷூக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கடைசியாக அவரது வீட்டிற்கு டிசம்பர் 2ம் தேதி இரவு ஹரீஷ் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

கள்ளக்காதலி மஞ்சுளாவே கூலிப்படை ஏவி ஹரீஷை கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மஞ்சுளா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கணவரை பிரிந்த நான் ஹரீசுடன் நெருக்கமாக இருந்து வந்தேன். தனக்கு கடன் இருப்பதாக கூறி அடிக்கடி பணம் கேட்டுள்ளார். கேட்டபோதெல்லாம் ரூ.10 லட்சம் வரை கொடுத்துள்ளார்.

வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் மீண்டும் பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளார். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் ஹரீஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அப்படி இருந்த போதிலும் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் ஹரீஷ் மீது ஆத்திரமடைந்த நான் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்யப்பட்டது. எனது நண்பரான ஓசூர் டவுனை சேர்ந்த மோனிஷ் (24) என்பவரை அணுகினேன்.

இதையடுத்து, கூலிப்படைக்கு ரூ.10 லட்சம் கொடுப்பதாக கூறி, அட்வான்சாக ரூ.4.50 லட்சம் கொடுத்தேன்.

கடந்த 2ம் தேதி எனது வீட்டிற்கு ஹரீஷ் வருவதை மோனிஷிடம் தெரிவித்து 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொன்றனர்.

இதையடுத்து மஞ்சுளா மற்றும் மோனிஷ்(24), ஓசூரை சேர்ந்த முகமது ரிகான்(21), முஜாமில் (21), முஸ்ரப் (24), சமீர் (21), அபி (எ) சதீஷ்குமார்(19) ஆகிய 10 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN