Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 7 டிசம்பர் (ஹி.ச.)
சபரிமலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நெரிசலற்ற தரிசனத்துக்காகவும் கூட்டுப் படைப்பிரிவுகள் சார்பில் அணி வகுப்பு நடைபெற்றது.
மேலும் இன்று இரவு வரை பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சபரிமலையில் பல்வேறு துணை ராணுவப் படைகள் சார்பில் நேற்று முதல் கூடுதல் பாதுகாப்புகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் படி சந்நிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக துணை ராணுவத்தின் பல்வேறு படை பிரிவுகள் சபரிமலைக்கு வந்துள்ளன.
மேலும் சந்நிதானம், பெரிய நடை பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் படைப்பிரிவினர் ஊர்வலமாகச் சென்றனர்.
இது குறித்து சந்நிதானம் காவல் துறை சிறப்பு அதிகாரி ஆர்.குமார் கூறுகையில்,
பொதுவாக நடை சாத்தப்பட்ட பிறகு மாளிகைப்புரம், மணிமண்டபம், அன்னதான மண்டபம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பக்தர்கள் ஓய்வெடுப்பது வழக்கம்.
ஆனால் இன்று ஒருநாள் மட்டும் இரவு நடை சாத்தியபிறகு பதினெட்டாம்படிக்கு மேல் பகுதியின் எந்த இடத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பம்பையில் இருந்து வரும் பக்தர்கள் நடை பந்தல் மற்றும் வரிசையில் காத்திருக்கலாம்.
ஆனால் இன்று (ஞாயிறு) காலையிலேயே பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவர். திருமுற்றம் மற்றும் சந்நிதானத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / Durai.J