கோவையில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய தரமற்ற சைக்கிள்கள்
கோவை, 7 டிசம்பர் (ஹி.ச.) ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு 117 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினர். ஆனா
Poor Quality Bicycles Provided by Government to Students in Coimbatore


Poor Quality Bicycles Provided by Government to Students in Coimbatore


கோவை, 7 டிசம்பர் (ஹி.ச.)

ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு 117 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினர். ஆனால், வழங்கியதுமே அந்த சைக்கிள் ஓட்டும் நிலையில் இல்லை என்று தெரிவித்த மாணவர்கள், பாகங்களும் தரமற்று இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில்,

எங்களுக்கு காற்றில்லாத டயர்களுடன் தான் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. சில சைக்கிள்களில் டியூப் வால்வுகள் இல்லை, பிரேக்குகள் சரியாக பொருத்தப்படவில்லை, பல சைக்கிளில் பெல் ஒழுங்காக வேலை செய்யவில்லை.

இதனால் பள்ளியில் இருந்து நேராக பழுது பார்க்கும் கடைக்கு செல்ல வேண்டிய நிலை தான் ஏற்பட்டது. என்றனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,

சைக்கிளில் காற்று இல்லை என்றால் மாணவர்கள் இறக்கி விட்டு இருப்பார்கள் என்று ஒப்பந்ததாரர்கள் கூறுகிறார்கள்.

உண்மையில் வழங்கப்பட்ட சைக்கிள்கள் தரமில்லாதவை. என்றனர்.

Hindusthan Samachar / V.srini Vasan