Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 7 டிசம்பர் (ஹி.ச.)
தென்காசி, கடையநல்லூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இது தொடர்பாக தென்காசி கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மங்கம்மாள் சாலை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (9.12.2025, செவ்வாய்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
அதன்படி தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் கீழப்புலியூர், தென்காசி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (9.12.2025, செவ்வாய்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்டுள்ள நேரங்களில் பின்வரும் இடங்களில் மின்விநியோகம் இருக்காது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்செவல், சுப்ரமணியபுரம், உள்ளார். வெள்ளானைகோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b