சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி - கோவை மாவட்டத்தில் 5 லட்சம் பேர் நீக்கம்
கோவை, 7 டிசம்பர் (ஹி.ச.) கோவையில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர தீர்த்தம் மூலம் இறந்த வாக்காளர்கள் உட்பட 5 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் சி
Special Voter List Revision: 5 Lakh People Removed in Coimbatore District - Officials' Information


Election


கோவை, 7 டிசம்பர் (ஹி.ச.)

கோவையில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர தீர்த்தம் மூலம் இறந்த வாக்காளர்கள் உட்பட 5 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை உட்பட 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று வாக்காளர் கணக்கிட்டு படிவங்களை வழங்கும் பணியில் கடந்த மாதம் 4 ம் தேதி முதல் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டனர். தற்பொழுது வாக்காளர்கள் இடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீடு படிவங்களை பெற்று, அதனை செல்போன் செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் இறந்த வாக்காளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு நீக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் இறந்த வாக்காளர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் மற்றும் சம்பந்தப்பட்ட முகவரியில் இல்லாமல் தொடர்பு கொள்ள முடியாத வாக்காளர்கள், முகவரி மாறி சென்றவர்கள், இரட்டை பதிவு என 3 லட்சத்து 85 ஆயிரம் பேர் என மொத்தம் ஐந்து லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிகபட்சமாக கோவை வடக்கில் 66 ஆயிரத்து 525 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக வால்பாறையில் 29 ஆயிரத்து 691 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் தற்போது 32 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சமாக குறையும்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது கோவை மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இறந்த வாக்காளர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 592 பேர் தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றவர்கள், இரட்டை பதிவு உள்ளிட்ட வாக்காளர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் பட்டியல் சேர்த்து படிவம் ஆறு பெறப்பட்டு வருகிறோம் என்றும், மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி கோவை தெற்கு, தொண்டாமுத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி 100% நிறைவு அடைந்து உள்ளது.

கவுண்டம்பாளையம் மிகப்பெரிய தொகுதி என்பதால் தற்பொழுது அங்கு 87 சதவீதம் அளவிற்கு நிறைவடைந்து உள்ளது. சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 91 சதவீதம், சூலூர் தொகுதியில் 97, சதவீதமும் கோவை வடக்கு தொகுதியில் 98 சதவீதமும், கிணத்துக்கடவு தொகுதியில் 99 சதவீதமும் நிறைவு அடைந்து உள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் இன்னும் சில நாட்களில் முடிக்கப்படும் நேரம் திட்டமிட்டபடி 10-ஆம் தேதி கோவை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Hindusthan Samachar / V.srini Vasan