Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 7 டிசம்பர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி கிராமத்தில் உள்ள பெரியார் இராமசாமி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ள விளையாட்டு மைதானத்தில், மாநில அளவிலான ஹாக்கி போட்டி, கடந்த 05ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது.
நேரு ஹாக்கி குழு மற்றும் எஸ்.மோகன் நினைவு ஹாக்கி குழு இணைத்து நடத்தும் இப்போட்டில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஹாக்கி விளையாட்டு அணியினர் பங்கேற்றிருந்தனர்.
நாக் அவுட் முறையில் நடைபெற்று வரும் இப்போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று வரும் அணிகளில் இருந்து தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணிகள் லீக் முறையில் இறுதிப்போட்டி நடைபெறும். அந்த வகையில் என்.எச்.சி. நாகரசம்பட்டி அணி முதலிடத்தை பிடித்து முதல் பரிசை தட்டிச்சென்றது. இரண்டாம் இடத்தில் சென்னை சிட்டி போலீஸ் அணியும், மூன்றாம் இடத்தில் வெஸ்ட் ஜோன் போலீஸ் அணியும், நான்கான் இடத்தில் அருளானந்தம் மதுரை அணிநும், ஐந்தாம் இடத்தில் ஆந்திரா ஆக்கி அணியும் இடம் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இவ்விளையாட்டு போட்டியினை கிருஷ்ணகிரி மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் ஞானசேகரன், மற்றும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ரங்கநாதன், இளங்கோ, குணாவசந்தரசு, குமரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் நிறைவு நாளில் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J