Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.)
இந்திய ராணுவத்தினர் கொடி நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இது தொடர்பாக இன்று (டிச 07) முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
தாயகம் காக்கத் தன்னலம் மறந்து பணியாற்றும் முப்படை வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் கொடி நாளில் நாட்டு மக்களின் சார்பில் எனது வணக்கங்கள்!
மக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாக வாழ, உயிரைத் துச்சமாக எண்ணி, கடுமையான சூழல்களில் கண்ணுறங்காமல் காவல் காக்கும் படைவீரர்களின் பணி ஈடு இணையற்றது.
தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும் கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களான நம் அனைவரின் கடமை!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b