Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 7 டிசம்பர் (ஹி.ச.)
திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன். இவர் திமுக விவசாய பிரிவின் மாநில செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாகவும் இருந்து வருகிறார்.
இவரது வீடு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேகரன் நகர் பகுதியில் ஏ.கே.எஸ்.விஜயனுக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.
இவர்கள் கடந்த 28ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்று விட்டு மீண்டும் டிசம்பர் 1ம் தேதி வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு நகைகள், வெள்ளி மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. முதலில் 300 சவரன் கூறப்பட்ட நிலையில் பிறகு 87 சவரன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது.
இதனையடுத்து ஏ.கே.எஸ்.விஜயன் தரப்பு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில், தருமபுரியை சேர்ந்த தாய், மகன்கள், மகள் கொள்ளையில் ஈடுபட்டதும் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே விடுதியில் அறை எடுத்து தங்கி நோட்டமிட்டு கொள்ளையடித்துள்ளதும் தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் தர்மபுரி பதுங்கி இருந்த முகமது யூசுப் மனைவி பாத்திமா ரசூல்(54), மகன்கள் மொய்தீன் (37), சாதிக் பாஷா (33), மகள் ஆயிஷா பர்வீன் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் திருடு போன நகைகள், வெள்ளிப் பொருட்களை மீட்டனர்.
பின்னர் நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இதே குடும்பத்தைச் சேர்ந்த தலைமறைவாக உள்ள ஷாஜகான் (26) என்பவரைத் தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN