Enter your Email Address to subscribe to our newsletters

உசிலம்பட்டி, 7 டிசம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி அருகில் தோப்பு கருப்புசாமி கோவில் வத்தலக்குண்டு- உசிலம்பட்டி நெடுஞ்சாலையில்
காவல் தெய்வமான தோப்பு கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடந்து செல்வோர் உட்பட அனைவரும் இக்கடவுளை வணங்குவதால் கோயில் எப்பொழுதும் திறந்து இருப்பது வழக்கம்.
இந்நிலையில் கோவில் பூசாரி வாரம் ஒரு முறை மட்டும் கோவிலுக்கு பூஜைக்கு வருவார் என கூறப்படுகின்றது.
அதே போல,கோவில் பூசாரி ஆறுமுகம் கோவிலுக்கு வந்த போது கோவில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய கடிகாரம் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார்.
உடனடியாக அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கோவிலில் வந்து பெரிய கடிகாரத்தை எடுத்து செல்வது தெரிய வந்தது.
இது குறித்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.,
Hindusthan Samachar / Durai.J