ஈரோட்டில் 16- ஆம் தேதி தவெக பிரச்சார கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு!
சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.) வருகின்ற டிசம்பர் மாதம் 16ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஈரோடு பலத்தாம்பாளையத்தில் பிரச்சார கூட்டம் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் காவல்துறை அந்த இடத்தில் அனுமதி கொடுப்பதற்கு மறுக்கப்பட்டதாக தகவல் வெ
Vijay


சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.)

வருகின்ற டிசம்பர் மாதம் 16ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஈரோடு பலத்தாம்பாளையத்தில் பிரச்சார கூட்டம் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் காவல்துறை அந்த இடத்தில் அனுமதி கொடுப்பதற்கு மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

இந்நிலையில் ஏற்கனவே மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் பவளத்தம்பாளையம் பகுதியில் உள்ள ஏழு ஏக்கர் இடத்தில் கூட்டம் நடத்துவதற்காக காவல்துறையினர் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், 75 ஆயிரம் பேர் வருவார்கள் என கடிதம் வாயிலாகவும் 30000 பேர் பங்கேற்பார்கள் என வாய்மொழி வாயிலாகவும் தமிழக வெற்றிக்கழகத்தினர் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் பிரச்சார கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று இடத்தை தேர்வு செய்யக்கூடிய பணியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோன்று பவளத்தான் பாளையம் பகுதியில் முன்னேற்பாடுகளுடன் கூட்டம் நடத்துவதற்கும் தொடர்ந்து காவல்துறையினரிடம் தமிழக வெற்றி கழகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்

Hindusthan Samachar / P YUVARAJ