Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 7 டிசம்பர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை தமிழகத்திலே இரண்டாவது சந்தையாகும் இந்த சந்தையில் தக்காளி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திரா, கர்நாடாக, கேரளா மாநில வியாபாரிகள் மற்றும் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் சந்தைக்கு வந்து தங்கள் பொருட்களை வருகிறார்கள்.
இதனால் சந்தை ஞாயிறு தோறும் கலை கட்டும் மக்கள், வியாபாரிகள் ஒரு விற்கவும் வாங்கவும் வாரத்திற்கு தேவையான காய்கறிகள், தானிய வகைகளை வாங்கி செல்கிறார்கள்.
இதனால் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு எடுத்து வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
காய்கறிகள் விலை அதிகளவில் வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக குறைந்து விலை என்பதால் இல்லத்தரசிகள் அனைத்து காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த காலங்களில் தக்காளி, முருங்கைகாய், முள்ளங்கி வரத்து குறைந்துள்ளது.
இதனால் போன்ற காய்கறிகள் விலை இல்லாமால் கால்நடைகளுக்கு உணவாக வழங்கியும் தோட்டத்திலே அழித்தும் ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவாக கொட்டினார்கள்.
இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் அடைந்து வந்தனர்.
அதனை தொடர்ந்து மழையின் காரணமாக காய்கறிகள் வரத்து குறைத்து விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ தக்காளி ரூ 40 க்கும் கத்திரிகாய் 25 க்கும், வெண்டைகாய் 50 க்கும், முள்ளங்கி 25 க்கும், பீர்க்கங்காய் 30 க்கும் புடலங்காய் 25 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
விலை கேட்டவுடன் இல்லதரசிகள் கடும் அதிரிச்சி அடைந்தனர் வேறு வழியின்றி கிலோ கணக்கில் காய்கறிகளை வாங்கி சென்றவர்கள் அரை, கிலோ என வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
Hindusthan Samachar / Durai.J